ஈரோடு,
தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இந்திய மாணவர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட மாநாடு தமயந்தி பாபு சேட் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகி வினிஷா தலைமை வகித்தார்.பிரியதர்ஷினி வரவேற்புரையாற்றினார். மாநாட்டில் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன் துவக்க உரையாற்றினார். முன்னதாக, இம்மாநாட்டில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவித்தலை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரிமாணவர்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும். அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் குடிநீர், கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலில் மாற்ற வேண்டும். ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதி
யில்உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் புதிய மாவட்ட தலைவராக ஓம் பிரகாஷ், செயலாளராக பிரவீன், உள்ளிட்ட 13 பேர் கொண்ட செயற்குழுவும், 21 பேர் கொண்ட மாவட்டக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மாநில துணை தலைவர் எம்.கண்ணன் நிறைவு உரையாற்றினார். சஞ்சய்குமார் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.