நீலகிரி;
நீலகிரி மாவட்டத்தில் சீகூர் பள்ளத்தாக்கு பகுதியில் யானைகள் வழித்தட
மாக கண்டறியப்பட்டுள்ள நிலத்தில் கட்டப்பட்டுள்ள 27 ரிசார்ட் வளாகங்களில் உள்ள 275 கட்டடங்களுக்கு சீல் வைப்பதற்கான நோட்டீஸ் கொடுக்கும் பணி தொடங்கியது.

சீகூர் பள்ளத்தாக்கு பகுதியில் சீகூர் முதல் சிங்காரா வரையிலான 50 கி.மீ.
தூரத்தில் யானைகள் வழித்தட நிலங்களாக கண்டறியப்பட்டுள்ள 6,000 ஏக்கர்
வனப் பகுதியில் விதிகளை மீறி, குடியிருப்புக்கான அனுமதி பெற்று வணிக நோக்கிலான ரிசார்ட்டுகள் கட்டப்பட்டது தெரிய வந்தது.உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 27ரிசார்ட் வளாகங்களுக்கு சீல் வைக்கும்பணிக்கு முன்னதாக நோட்டீஸ்கொடுக்கும் பணிn வெள்ளிக்க்கிழமையன்று தொடங்கியது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் கிடைத்துள்ளதையடுத்து அதில் குறிப்பிட்டுள்ள 27 ரிசார்ட் வளாகங்க
ளில் உள்ள 275 கட்டடங்களுக்கு சீல் வைப்பது தொடர்பான நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தப்பணிகள் முடிவடைந்ததும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு மேல் அந்தக் கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணிதொடங்கும் என தெரிவித்தார்.

மேலும், யானைகள் வழித்தட நிலத்தின் கீழ் சில கட்டடங்கள் வராவிட்டாலும் தமிழ்நாடு தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதால், அதன் கீழும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.