லக்னோ;
வீரமரணம் அடைந்த ராணுவத்தினரை, பாஜக எம்.பி. நேபாள் சிங் மீண்டும் அவமரியாதை செய்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம், புல்வானா பகுதியிலிருந்த இந்திய பாதுகாப்புப் படை முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் சிலர் பலியாகினர்.
இச்சம்பவம் குறித்து, அப்போது கருத்து தெரிவித்த பாஜக தலைவரும், உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி எம்.பி.யுமான நேபாள் சிங், “ராணுவம் என்றால் வீரர்கள் மரணம் அடைவது வழக்கமான ஒன்றுதான்” என்றும், “சண்டையின்போது ராணுவ வீரர்கள் மரணம் அடையாத நாடு எங்கிருக்கிறது?” என்றும் அலட்சியமாக கூறியிருந்தார். “இதுவரை துப்பாக்கிக் குண்டுகளை சமாதானப்படுத்தி, ராணுவ வீரர்களின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் கருவி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்றும் கேலி பேசியிருந்தார்.நோபாள் சிங்-கின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தவுடன், மன்னிப்புக் கேட்பதாக கூறி பின்வாங்கினார்.இந்நிலையில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற இடத்தில், நேபாள் சிங் மீண்டும் ராணுவ வீரர்களை அவமரியாதையாக பேசியுள்ளார்.

ஏற்கெனவே பேசியதுபோல, “ராணுவத்தில் பணியாற்றும் ஜவான்கள் இறக்கத்தான் நேரிடும்; ராணுவ வீரர்கள் இறக்காத நாடு ஒன்றுகூட இல்லை; இறப்பில் இருந்த தப்பிக்கும் சாதனமும் இல்லை” என்று கூறியுள்ளார். இது மீண்டும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: