நொய்டா:
நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்காக, விவசாயிகளின் நிலங்களை அவர்களின் சம்மதம் இன்றியே கையகப்படுத்துவோம் என்று உத்தரப்பிரதேச பாஜக அரசு கொக்கரித்துள்ளது.

அவசியமான போக்குவரத்துச் சேவைகளுக்காக ‘நிலங்கள் கையகப்படுத்தும் சட்டம்’ 2(1) பிரிவின் கீழ், உரிமையாளர்கள் சம்மதமின்றியே அவர்களின் நிலங்களை கையகப்படுத்த அதிகாரம் உள்ளதாகவும் உத்தரப்பிரதேச அரசு கூறியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தின் தொழில் நகரமான நொய்டா-வில், சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையில், ‘யமுனா எக்ஸ்பிரஸ்வே இண்டஸ்டிரியல் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி’ என்ற தனியார் நிறுவனம் இறங்கியுள்ளது. அரசு மற்றும் தனியார் கூட்டுத் திட்டம் என்ற அடிப்படையில், இந்த விமான நிலையத்திற்கு, விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தித் தரும் பொறுப்பு மட்டும் ஆதித்யநாத் அரசிடம் விடப்பட்டுள்ளது.
அந்த வகையில், நொய்டாவின் ஜீவர் பகுதியில் சுமார் ஆயிரத்து 328 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு குறிவைத்த ஆதித்யநாத் அரசு, சந்தை மதிப்பைக் காட்டிலும் 2 மடங்கு விலை தருவதாக விவசாயிகளுக்கு ஆசை காட்டியது. ஆனால், தங்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு தரும் எந்த இழப்பீடும் ஈடாகாது என்று விவசாயிகள் கூறி விட்டனர்.

ஒருகட்டத்தில் முதல்வர் ஆதித்யநாத்தே நேரடியாக சென்று விவசாயிகளிடம் பேரம் நடத்திப் பார்த்தார். அப்போதும் விவசாயிகள் நிலத்தை தர முடியாது என்று உறுதியுடன் கூறிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆதித்யநாத், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடத்தி- அதில், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு ஜீவர் விமான நிலையம் அவசியம் என்பதால், அவசியமான போக்குவரத்துச் சேவைகளுக்கான சட்டம் 2 (1) பிரிவின் கீழ், விவசாயிகளின் சம்மதம் இன்றியே அவர்களின் நிலங்களை கையகப்படுத்துங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: