===க.சுவாமிநாதன்===
“மேக்ரோ ஸ்கேன்” தளத்தில் ஜூலை மாதம் வெளியாகியுள்ள பிரபாத் பட்நாயக் அவர்களின் “பொருளாதாரத்தின் நிலை” (கூழநு ளுகூஹகூநு டீகு கூழநு நுஊடீசூடீஆலு) கட்டுரையிலிருந்து

* இந்தியப் பொருளாதாரம் இன்று சந்திக்கிற முக்கியப் பிரச்சனைகள் என்ன?

பல நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் கூறுவது போல மூன்று முக்கியப் பிரச்சனைகளை இந்தியப் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ளது. ஒன்று, பணவீக்கம், இரண்டாவது வர்த்தகப் பற்றாக்குறை, மூன்றாவது. தொழில் தேக்கம் ஆகியன ஆகும்.

* பணவீக்கத்தின் நிலை என்ன?

ஜூன் 2018ல் மொத்த விலைக் குறியீட்டெண் 5.77 சதவீத உயர்வை கடந்தாண்டு இதே மாதத்தோடு ஒப்பிடும்போது எட்டியுள்ளது. இது டிசம்பர் 2013க்கு பிந்தைய காலத்தில் 54 மாதங்களில் கண்டிராத உயர்வு ஆகும்.

* வர்த்தகப் பற்றாக்குறை எவ்வளவுழூ

ஜூன் 2018ல் வர்த்தகப் பற்றாக்குறை 16.6 பில்லியன் டாலர்கள், ஐந்தாண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 1,15,000 கோடிகள்

* தொழில் தேக்கம் எந்த அளவிற்கு உள்ளது?

தொழில உற்பத்திக் குறியீட்டெண் மே 2018ல் 3.2 சதவீத உயர்வாக கடந்தாண்டு இதே மாதத்தோடு ஒப்பிடும் போது இருந்தது. ஏழு மாதங்களில் இதுவே குறைவான விகிதம். அதிலும் ஆலை உற்பத்தி வளர்ச்சி விகிதம் வெறும் 2.8 சதவீதம் தான். தொழில் தேக்கம் இந்தியாவில் மிக நீண்டதாக உள்ளது. கடந்த சில மாதங்களில் இருந்த கொஞ்ச நஞ்ச மீட்சியும் தற்போது கரைந்து போயுள்ளது. இது முறை சார்ந்த தொழில்கள் பற்றியதே.

* முறை சாராத் தொழில்களின் நிலைமை?

அது பற்றி விரிவாக இங்கு பேசவில்லை. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றால் முறைசாராத் தொழில்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. தொழில் தேக்கத்தை அவை மேலும் மேலும் உறுதி செய்கின்றன.

* மூன்று முக்கியப் பொருளாதாரக் குறியீடுகளும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதற்க என்ன காரணம்?

தொழில் தேக்கம், பணவீக்கம், அதிகரித்துள்ள வர்த்தகப் பற்றாக்குறை ஆகிய மூன்றும் ஒரு சேரத் தாக்குவது கவனத்திற்குரியது. மேம்போக்காக, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரித்ததால் விலைவாசி உயர்ந்தது; இறக்குமதி விலைகளும் அதிகரித்ததால் வர்த்தகப் பற்றாக்குறையும் அதிகரித்தது; மக்களின் வாங்கும் சக்தியை இது குறைத்ததால் இது தொழில் தேக்கத்திற்கும் வழிவகுத்தது என்று விளக்கம் தருகிறார்கள். ஆனால் இக்கருத்து முற்றிலும் தவறானது.

* அப்படியெனில் உண்மைக் காரணம் என்ன?

தொழில் தேக்கம் அண்மையில் ஏற்பட்டதல்ல. மே 2017லிலேயே ஆலை உற்பத்தி 2.6 சதவீதமாகவே இருந்தது. ஜூன் 2017ல் 3.1 சதவீதமாகவே இருந்தது. கடந்த சில மாதங்களில் தென்பட்ட மீட்சி தான் மீண்டும் காணாமல் போயிருக்கிறது. அதுபோல வர்த்தகப் பற்றாக்குறை பிரச்சனையும் நீண்டகாலமாக உள்ளது. அமெரிக்க நாடு வட்டி விகிதங்களை உயர்த்தியது ஓர் காரணம். அங்கு வட்டி விகிதம் ஜீரோவாக இருந்தபோது இந்தியா போன்ற பொருளாதாரங்களுக்குள் நிறைய நிதிவரத்து இருந்தது. இங்கு கூடுதல் வட்டி கிடைக்குமென்பதே அதற்கு காரணம். இதனால் நமது வர்த்தகப் பற்றாக்குறை குறைந்ததோடு, அந்தியச் செலாவணி கையிருப்பும் அதிகரித்தது.

* தற்போது என்ன நிலைமை?

தற்போது நிதி வெளியேறுகிறது. அமெரிக்க வட்டி விகிதங்கள் இன்னும் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் காரணம். இது ரூபாய் மீது அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியால் இதை ஈடுகட்ட இயலவில்லை. இது உள்நாட்டிலும் விலை உயர்வை உருவாக்கிறது. ரூபாய் மதிப்பு குறைந்தால் இறக்குமதிப் பொருட்களின் விலை கூடுமல்லவா! ஆகவே எண்ணெய் விலை அதிகரிப்பு அடிப்படைக் காரணம் அல்ல. அதுவும் தலைக்கு மேலே சுமையை ஏற்றுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் கால்களே பலவீனமாக 04
ஆனாலும் இந்திய ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் சீனாவை விட இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது என்று பெருமை பேசுகிறார்களே!

இவர்கள் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான அடிப்படை வித்தியாசத்தைத் தவற விடுகிறார்கள். சீனா நீண்டகாலமாக நடப்புக் கணக்கு உபரியை வைத்துள்ள நாடு. இந்தியாவோ நீண்ட காலமாக பற்றாக்குறையை வைத்துள்ள நாடு. இதனால் உலகம் முழுவதும் நகர்கிற நிதி மூலதனத்தை ஈர்ப்பது குறித்து சீனா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியா கவலைப்படவேண்டும். அமெரிக்காவன் வட்டி விகிதங்கள் ஜீரோ ஆக இருந்தவரை இந்தியாவால் சமாளிக்க முடிந்தது. ஆனால் பழிவாங்குவது போல இன்று பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

* இந்நிலைமையை எப்படி இந்தியா எ திர் கொள்கிறது?

இந்தியாவுக்கு உலகம் முழுவதும் நகர்கிற நிலைமையில் உள்ள மூலதனம் வரவேண்டும் என்றால் இன்னும் இங்கு வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும். இதற்கு அரசின் செலவினத்தைக் குறைக்க வேண்டும். சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது எல்லாம் சேர்ந்து பொருளாதாரத்தை மேலும தேக்கத்தை நோக்கித் தள்ளும். சாதாரண மக்களைக் கடுமையாக இது பாதிக்கும்.

* பண வீக்கம் கட்டுக்குள் வருமா?

அரசாங்கமே கூறுவது போல அது செலவினத்தால் உந்தப்படும் பணவீக்கம் (cost push inflation). ஆகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயரும்போது, வேறு தடுப்பு நடவடிக்கைகள் இல்லாத பட்சத்தில், பண வீக்கமும் அதிகமாகும். இப்பணவீக்கத்தை ஈடுகட்டுகிற வகையில் தொழிலாளர்களின் ஊதியமோ, கூலியோ அதிகரிக்காது. ஆகவே பணவீக்கம் அவர்களின் வருமானத்தில் ஈடுகட்டப்படாமல் செலவிலேயே ஈடுகட்டப்படுகிறது ஓர் அடிப்படையான மாற்றத்தை இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகிறது.

* அது என்ன அடிப்படையான மாற்றம்?

இந்தியாவில் நவீன தாராளமயம் எப்போதுமே தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்களிடமிருந்தே பறித்து வந்துள்ளது. வெளிப்படையான நெருக்கடி இல்லாத காலத்திலேயே இது நிகழ்ந்தது. தற்போது மிகவும் ஆழமான நெருக்கடியை இந்தியப் பொருளாதாரம் சந்திக்கிறது. சர்வதேச நிதி மூலதனம் இந்தியப் பொருளாதாரத்தைப் பார்த்து முதுகைக் காட்டுவதென்பது, இந்திய உழைப்பாளி மக்களிடமிருந்து பறிக்கப்படுவதை பன்மடங்காகப் பெருக்கப்போகிறது. ஊதியம் பெறுவோரும், நகர்ப்புற நடுத்தர மக்களும் கூட தப்பப் போவதில்லை. நவீன தாராளமயத்தின் கோரைப் பற்களை பார்க்கப் போகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.