சென்னை;
பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீதும், வருகின்ற ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் இதனையடுத்து அன்று மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, அதிவேக பிராட்பேண்ட் இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் சி.பி.ஐ. நீதிமன்றம் விடுவித்தது.
குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், 7 பேரும் வழக்கை சந்திக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. சி.பி.ஐ. நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்து சாட்சி
விசாரணையைத் தொடங்கவும், விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, இந்த வழக்கு, சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,
குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக, வருகின்ற ஆகஸ்ட்17 ஆம் தேதியன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் அன்றைய தினத்தில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட
7 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.