புதுதில்லி
விரைவில் மீண்டு வர…
‘முன்பு எப்போதும் இல்லாத அளவு தற்போது கேரளாவில் கன மழை பெரும்
பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கேரள மக்கள் இந்தக் கடினமான நேரத்தில் இருந்து விரைவில் மீண்டுவர இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்’ என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள் ளார்.

சென்னை
சூர்யா, கார்த்தி நிதியுதவி
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்களுக்கு இதுவரை 30க்கும் மேற் பட்டோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மழைபெய்து வருவதால் மீட்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்குஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புக்கு நடிகர்கள்
சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளனர்.

திருவனந்தபுரம்
மம்முட்டி வேண்டுகோள்
கேரள மாநிலம் எதிர்கொண்டுள்ள வரலாறு காணாத பெருவெள்ளத்தால் பாதிக்
கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு அனை
வரும் மனமுவந்து உதவுமாறு மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தனது முகநூல் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவனந்தபுரம்
ஹெலிகாப்டரை விரும்பாத முதல்வர்!
கேரளாவில் வெள்ள பாதிப்புகள் அதிகம் இருக்கும் பகுதிகளை கார் மூலமாக பார்வை
யிட முதல்வர் பினராயி திட்டமிட்டிருந்தார். ஆனால், பல இடங்களில் வெள்ள நீரால்
சாலை துண்டிக்கப்பட்டு இருப்பதால் ஹெலிகாப்டரில் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி
னர். அதனை விருப்பம் இல்லாமல் ஏற்றுக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.

இராமநாதபுரம்
மீனவர்கள் சிறைபிடிப்பு
இராமநாதபுரம் மற்றும் புதுகை, தஞ்சை மாவட்டங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற
தமிழக மீனவர்கள் 27 பேரை வெள்ளிக் கிழமை நள்ளிரவு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றதால் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை
கடற்படையினர் காற்றின் வேகத்தினால் எல்லை தாண்டி வந்த தமிழக நாட்டுப்படகு
களை சிறைபிடித்துள்ளனர்.

பாரீஸ்
குப்பையை அகற்ற காக்கை
பிரான்ஸ் நாட்டில் புய் டூ ஃபோ (Puy du Fou ) என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீம்
பார்க் உள்ளது. இங்கு, தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். பூங்கா வளாகத்தில் பார்வையாளர்கள் போடும் குப்பைகளை எடுக்கக் காக்கைகளுக்கு பயிற்சிகள் அளிக்
கப்பட்டுள்ளது. வரும் வாரம் முதல் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

புதுதில்லி
அலங்கரிக்கப்படும் செங்கோட்டை
நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதை முன்னிட்டு தில்லி செங்கோட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங் கோட்டை முழுவதும் 2,500 விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

புதுதில்லி
பெண்கள் ஸ்வாட் குழு
இந்திய வரலாற்றில் முதல் முறையாகச் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகள் படைப்
பிரிவில் (SWAT) பெண் காவலர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 36 பெண்களை சேர்த்து இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் தில்லியில் தீவிரவாதத்துக்கு எதிரான பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

இஸ்லாமாபாத்
மன்னிப்பு கேட்ட இம்ரான்
பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின்போது, இஸ்லாமா
பாத் தொகுதியில் வாக்களித்த இம்ரான் கான், அனைவரது முன்னிலையிலும் தனது வாக்கைப் பதிவு செய்தார். இம்ரானின் இந்தநடவடிக்கை சர்ச்சையை கிளப்பியது. இதற்காக, தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கடிதம் அளித்துள் ளார் இம்ரான் கான்.

Leave a Reply

You must be logged in to post a comment.