சென்னை;
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை. ராகுல் காந்திக்கு சரியான பாதுகாப்பு அளிக்காத தமிழக காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். ராஜாஜி அரங்கத்திற்கு பொறுப்பேற்றிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.