சென்னை:                                                                                                                                                                              டி.என்.பி.எல். என அழைக்கப் படும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ டி-20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் ஜூலை மாதம் 11-ஆம் தேதி தொடங்கியது.

லீக் போட்டியின் முடிவில் திண்டுக்கல்,மதுரை,கோவை, காரைக்குடி ஆகிய அணிகள் முதல்
4 இடங்களைப் பிடித்து ‘பிளே ஆப்’சுற்றுக்கு தகுதி பெற்றன.திண்டுக்கல் – மதுரை அணிகள்மோதிய ‘குவாலிபையர்-1’ ஆட்டத்தில், திண்டுக்கல் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.எலிமினேட்டர் ஆட்டத்தில் கோவை அணி 24 ரன் வித்தியாசத்தில் காரைக்குடியை வீழ்த்தி ‘குவாலிபையர் 2’ ஆட் டத்திற்குத் தகுதி பெற்றது.

வெள்ளியன்று நடைபெற்ற ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் மதுரை அணி 7 விக்கெட் வித்தி
யாசத்தில் கோவை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.இந்நிலையில் திண்டுக்கல் – மதுரை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டிசென்னையில் ஞாயிறன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.