கேரளாவில் தென்மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டி வருகிறது. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்ததில் , ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழை, வெள்ளத்தால் பாதிக் கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் 439 நிவாரண முகாம்கள் அமைக் கப்பட்டு இருக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மிட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் வருகின்றனர்.
மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் சிறிய அளவில் தற்காலிக பாலங்களை கட்டி, ராணுவ வீரர்கள் மக்களை பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

கேரள மாநிலத்திரல் நிலவு அசாதாரண சூழ்நிலையில் முதல்வர் பினராயி விஜயன், எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா வை அழைத்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 4லட்சமும், வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ 10 லட்சமும் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: