கொச்சி:
தீவிர மழைக்கு மீண்டும் வாய்ப்புள்ளதால் கேரள மாநிலத்தில் வயநாடு, இடுக்கி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு உச்சநிலையாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, கண்ணூர், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு ஆகிய
மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையுடன் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்பு சனியன்று விடுத்துள்ள முன்ன
றிவிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் ஆகஸ்ட் 14 வரை சிவப்பு எச்சரிக்கையும், ஆகஸ்ட் 15வரை ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கண்ணூர் மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 13 வரை சிவப்பு எச்சரிக்கையும், 15வரை ஆரஞ்சு எச்சரிக்கையும், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 12 வரை சிவப்பு, 14 வரை ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் அணைகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு துயரங்களிலிருந்து மக்களை மீட்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பல்வேறு ராணுவ பிரிவுகளும் களத்தில் இறங்கியுள்ளன. தரைப்படையான மெட்ராஸ் எஞ்ஜினியரிங் குரூப், கடற்படை
யின் விபத்து மீட்புக்குழு, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட பிரிவினர் மீட்பு நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பாலம், சாலை போன்றவை தகர்ந்தால் உடனடியாக போக்குவரத்துக்கு அவற்றை தயார் படுத்தும் பணிக்காக மெட்ராஸ் எஞ்ஜினியரிங் குரூப் பரவூர் தாலுகா சேந்த
மங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 30 பேர் உள்ளனர். பெரியாறின் முக்கிய நீர்வழிப்பகுதிகளில் அதிக அளவில் நீர் நிரம்பிச்செல்லும் பகுதி சேந்தமங்கலமாகும்.

இதுபோல் தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 37 பேர் கொண்ட படை ஆலுவா பகுதியில் உள்ளது. ஆடிஅமாவாசையை ஒட்டி ஏராளமானோர் முன்னோரை நினைவு கூரும் பலிதர்ப்பண நிகழ்ச்சிக்காக ஆற்றுப்பகுதிக்கு வருவார்கள் என்பதால் படகுகள், லைப்
ஜாக்கட்டுகளுடன் இந்த படையினர் முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பெரும்பாவூர் பகுதியில் 14பேர் கொண்ட கடலோரகாவல் படையினர் உள்ளனர். இதேபோன்று கப்பற்படையின் 2 பிரிவுகள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளன.அதோடு தீயணைப்பு மீட்புப் படையினர், காவல்துறை யினரும் இந்த பணிகளுக்கு தயார் நிலையில் உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: