லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு பாலம் கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியிருப்பது/ அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் பஸ்டி என்ற இடத்தில் புதிய மேம்பாலம் கட்டுமாண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை திடீரென சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 பேரை மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மே மாதம் 15ந்தேதி வாரணாசியில் இதே போல  மேம்பாலம் ஒன்று  கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாது. இதில் 18 பேர்  உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: