தீக்கதிர்

உஸ்மானியா பல்கலை.யில் பேச ராகுலுக்கு அனுமதி மறுப்பு…!

ஹைதராபாத்;
ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்குமாறு, ராகுல் காந்திக்கு மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக, ராகுல் காந்தி மாணவர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும், ராகுல் வருவதற்கு ஒரு தரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பல்கலைக்கழகத்தில் அமைதி நிலவுவதே முக்கியம் என்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.