சென்னை;
தமிழகத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலை
யத்துறை தெரிவித்துள்ளது.கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி மகாதேவன் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், மாநிலம் முழுவதும் 39 ஆயிரத்து 508 கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணவும், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவும் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் 9 ஆயிரத்து 14 கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அதில் 3 ஆயிரத்து 807 கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள 28 ஆயிரத்து 617 வாடகைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 6,900 வாடகைதாரர்களிடம் இருந்து ரூ.14 கோடியே 80 லட்சம் வாடகை பாக்கி வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், 22,600 கட்டிடங்களும் 33,565 காலியிடங்களும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவை கோவில்களின் நிர்வாக பயன்பாட்டிலும் வாடகையிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6,202 கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் அதில் 14,021 பேர் ஆக்கிரமித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்
பட்டுள்ளது. அறநிலையத் துறை அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கோவில் நிலங்களை மீட்க கூடுதலாக 6 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: