அரியானா மாநிலம் பிவானி மாவட்டம் ரோடாக் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது உறவினரின் குடும்பதில் பிறந்த மம்தா என்ற சிறுமியை 2002ம் ஆண்டிலிருந்து தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்தாண்டு சிங்கபுரா என்ற கிராமத்தை தலித் இளைஞரை காதலித்து வருவது குறித்து தனது தந்தை ரமேஷிடம் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து மம்தாவும் தலித் இளைஞரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்திருக்கின்றனர்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த ரமேஷ் இவர்களை பிரிக்க கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். காவல்துறையினர் இன்னும் மம்தாவிற்கு திருமண வயது வரவில்லை எனக்கூறி தலித் இளைஞரை சிறையில் அடைத்திருக்கின்றனர். இதையடுத்து மம்தாவை ரோடாக் நகரில் உள்ள சிறுமிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக புதனன்று நீதிமன்றத்திற்கு மம்தாவை காவல்துறையினர் அழைத்து வந்திருக்கின்றனர். அப்போது மம்தாவின் தந்தை ரமேஷ் தன்னுடன் வீட்டிற்கு வந்துவிடுமாறு மிரட்டியிருக்கிறார். இதற்கு மம்தா மறுத்ததையடுத்து, ஆத்திரமடைந்த ரமேஷ் இன்னும் 2 மணி என்ன நடக்கிறது பார் என்று கூறி மிரட்டி சென்றிருக்கிறார். காவல்துறையினர் நீதிமன்றத்தில் மம்தாவை ஆஜர் படுத்தி விட்டு திரும்ப வெளியே அழைத்து வந்திருக்கின்றனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேருடன் வந்த ரமேஷ் தனது மகள் மம்தாவை நோக்கி சுட்டிருக்கிறார். இதில் படுகாயமடைந்த மம்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.