சென்னை;
அங்கீகாரம் இல்லாத 5 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரத்தை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தெடர்பாக வெளியிட்ட அரசாணை யில், உரிய அமைப்பிடம் இருந்து பள்ளிக் கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிக தொடர் அங்கீகாரம் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டித்தும் மாணாக்கர்
களின் நலன் கருதி நிபந்தனையின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டதை ஏற்று ஓராண்டுக்கு மட்டும் அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று  2018 – 2019 ஆம் கல்வி ஆண்டில் 95 அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும், ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: