லண்டன்:
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி அன்று விண்டீஸ் அணிக்கெதிரான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.வெற்றியை கொண்டாடுவதற்காக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நைட் கிளப் ஒன்றுக்கு சென்றார்.
கிளப் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு கொண்டு தனது நண்பர் ஹேல்ஸுடன் மீண்டும் நள்ளிரவு 1 மணிக்கு சென்றார்.கிளப் மூடப்பட்டதால் உள்ளே அனுமதிககப்பட வில்லை.மது கிடைக்காத ஆத்திரத்தில் கிளப் அருகே நின்று கொண்டிருந்த ரியான் ஹாலே, ரியான் அலி ஆகியோரை ஸ்டோக்ஸ் கிண்டலாக பேசியதாக கூறி தகராறு ஏற்பட்டது.ஒருகட்டத்தில் மோதல் முற்றி ரியான் ஹாலே, ரியான் அலி ஆகியோரை ஸ்டோக்ஸ் சரமாரியாக தாக்கினார்.தகவலறிந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் உள்ள பதிவை ஆய்வு செய்து ஸ்டோக்ஸை கைது செய்தனர்.பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பான விசாரணை கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.நீதிமன்ற விசாரணையால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஸ்டோக்ஸ் கடந்த நான்கு நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். விசாரணையின்போது,ரியான் ஹாலே அளித்த சாட்சியத்தில்,”நான் ஒரு குழந்தைக்கு தந்தை.தவறே செய்யாதவர்கள் மீது சிலர் இப்படி செய்வது அதிர்ச்சியாக இருக்கிறது.என்னை ஸ்டோக்ஸ் கொன்றாலும் கொன்றிருப்பார். எப்படி என்னை கொல்லமால் விட்டார் என்று தெரியவில்லை “எனக்கூறினார்.

பென் ஸ்டோக்ஸ் அளித்த சாட்சியத்தில்,”நான் செய்தது அனைத்தும் தற்காப்புக்காகத்தான். தாக்க வேண்டும் என்று செய்யவில்லை. சம்பவம் நடந்த போது நான் குடிக்கவும் இல்லை என்று கூறியுள்ளார். விசாரணை முடிவில் ஹாலே முன்னாள் ராணுவ வீரரான ரியான் ஹாலே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.