சென்னை;
பணம் பெற்றுக்கொண்டு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண்கள் வழங்கிய முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசனைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் பணம்பெற்றுக்கொண்டு அதிக மதிப்பெண்கள் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் உமா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பேராசிரியர் பணியிலிருந்து உமா உட்பட 3 பேராசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்ற அனைத்து ஊழல்களுக்கும் காரணம் பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன்தான் என்றும் கணேசனைப் பதிவாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய பதிவாளரை நியமிக்கத்துணைவேந்தருக்கு அறிவுறுத்துமாறு தமிழக ஆளுநருக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது

Leave a Reply

You must be logged in to post a comment.