புதுதில்லி

ரபேல் ஒப்பந்தத்தை அனில் அம்பானி தலைமையிலான நிறுவனத்திற்கு அளித்திருப்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக, கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ் – இடதுசாரிக் கட்சிகள் – தெலுங்கு தேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அதில்  ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என்றும், நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. போர் விமானங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

 

 

Leave A Reply

%d bloggers like this: