புதுதில்லி;
ரபேல் ஒப்பந்தத்தை அனில் அம்பானி தலைமையிலான நிறுவனத்திற்கு அளித்திருப்பதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக, கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பு காங்கிரஸ் – இடதுசாரிக் கட்சிகள் – தெலுங்கு தேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி உட்பட பலர் கலந்து கொண்டார்கள். (ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.