மகாராஷ்டிராவில் வெடி குண்டு பதுக்கிய சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த அமைப்பினர் தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சங்பரிவார் அமைப்புகளில் ஒன்றான சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர் வைபவ் ரவுத். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் நகரில் வசித்து வருகிறார்.  இவருக்கு சங்பரிவாரின் வேறு சில இந்து அமைப்புகளிலும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வைபவ் ரவுத் இல்லத்தில் நேற்று  நள்ளிரவு   தீவிரவாத தடுப்புப் படை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.   இந்த சோதனையில் காவல்துறையினரும் மோப்ப நாய்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன.  அப்போது அவருடைய வீட்டில் 8 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் அவர் வீட்டுக்கு பக்கத்தில் அமைந்துள்ள கடை ஒன்றை சோதனை செய்த போது குண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களைக் கொண்டு சுமார் 2 டஜன் குண்டுகள் தயாரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. காவல் துறையினரின்  சோதனையின் போது வைபவ் ரவுத் உடன் இருந்துள்ளார். அவரை கைது செய்த தீவிரவாத தடுப்புப் படை காவல்துறையினர்  மற்றும் தடயவியல் துறை நிபுணர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.