திருப்பூர்,
பிஎஸ்என்எல்லில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஜூலை மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி திருப்பூர் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல்லில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கவேண்டிய ஊதியத்தை தாமதமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொழிற்சங்கங்களில் சார்பில் தொடர் போராட்டத்தின் காரணமாக ஊதியம் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.இதையடுத்து பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தொலைதொடர்பு ஊழியர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க துணைத் தலைவர் குருசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முகமது ஜாபர், கிளை தலைவர் வாலீசன், முத்துக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். செயலாளர் ரமேஷ் நன்றிகூறினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: