குமுளி:
கேரள மாநிலத்தில் இடுக்கி அணையிலிருந்து செறுதோணி அணையின் 3 ஷட்டர்கள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர் பெரியாற்றில் கரை புரண்டு ஓடுகிறது.இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு ஆலுவா, கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதி
களில் உயிரிழப்பு உட்பட பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் முல்லைப்
பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் தண்ணீர் வந்துகொண்டி ருப்பது கேரள மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

வெள்ளியன்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் முந்தைய நாளில் இருந்த 133.60 அடியிலிருந்து 134.50 அடியாக உயர்ந்தது. இந்த அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு இரண்டு வழிகளில் தண்ணீர் வருகிறது. மொத்தமுள்ள 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 1600 கன அடியும், இரச்சல்பாலம் கால்வாய் வழியாக வினாடிக்கு 800 கன அடியும் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதைவிட அதிக தண்ணீர் கொண்டுவர வாய்ப்பில்லை.

முல்லைப் பெரியாறு, அணை பகுதியில் வெள்ளியன்று மழை குறைந்து 24.8 மில்லிமீட்டரும், தேக்கடியில் 12.4 மில்லிமீட்டரும் பதிவாகி உள்ளது. வியாழ னன்று இது 115.6 மற்றும் 56.40 மில்லிமீட்டராக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 2400 கனஅடி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4167.87 கன அடியாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தது. தமிழ்நாடு
அதிக அளவு தண்ணீரை பெற்றுக்கொண்டதால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வியாழனன்று காலை 132.80 அடியானது.

அணையின் நீர் மட்டத்துக்கு ஏற்ப தமிழ்நாடு பெறும் தண்ணீரின் அளவும் குறைந்தது. தற்போது மீண்டும் அதிக அளவு தண்ணீரை தமிழ்நாடு பெற்றுக்கொள்கிறது. தமிழ்நாடு பெறும் தண்ணீரின் அளவை 2500 கன அடி வரை கொண்டு செல்லலாம். ஆனால், தேனி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படும். கடந்த காலங்களில் அவ்வாறு இரச்சல்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டதுண்டு.
மழை வலுவடைந்து அணையில் நீர்மட்டம் உயர்ந்தபோது. தமிழ்நாடு மின்சார வாரியம் அதை நன்றாக பயன்படுத்திக்கொண்டது. லோயர்கேம்பில் உள்ள நான்கு மின் உற்பத்தி நிலையங்களும் (பவர் ஹவுஸ்) முழு அளவில் மின்சாரம் தயாரித்தன.

கடந்த ஒருமாதமாக லோயர்கேம்பில் தினமும் 140 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்துள்ளது. அதுமட்டு மல்லாமல் இரச்சல் பாலம் கால்வாய் வழியாக விவசாயத் தேவைகளுக்காக தமிழ்நாடு 700 கனஅடி வீதம் தண்ணீர் பெற்றுள்ளது. வழக்கமாக முல்லைப் பெரியாறு பகுதியில்  நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை
பொழியும். அப்போதுதான் முல்லைப்பெரி யாறு அணையின் நீர்மட்டம் மிக அதிக பட்சமாக உயரும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அணை நிரம்பியது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

Leave A Reply

%d bloggers like this: