திருவனந்தபுரம்
நிகழ்ச்சிகள் ரத்து!
கேரளாவில் கனமழை பெய்து வருவதால்,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள் வதற்காக வரும் 12-ம் தேதி வரை உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ரத்து செய்துள்ளார். மேலும், தலைநகரிலிருந்து தொடர்ந்து
அவர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை
நிவாரண உதவி
கேரளா மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கேரளாவுக்கு தமிழக முதல் வர் ரூ.5 கோடி நிவாரண உதவி அறிவித்தார்.
தற்போது, கர்நாடக முதல்வர் குமாரசாமி 10 கோடி ரூபாய் நிவாரண உதவி அறிவித்
துள்ளார். மேலும், தேவைப்படும் நிவாரணப் பொருள்களும் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

புதுதில்லி
‘ஆதார் வேண்டாம்’
ஆதார் எண் இல்லாமல் ஆன்லைனில் வருமான வரித் தாக்கல் செய்யலாம் என்று
தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வந்து இரண்டு வாரம் கழித்து
தற்போது, ஆதார் எண் இல்லாமல் ஆன்லை னில் வருமான வரித்தாக்கல் செய்யும் வசதி
வருமான வரி இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உதகமண்டலம்
யானை வழியில் ரிசார்ட்
நீலகிரியில், யானைகள் வழித்தடத்தில் முறையான அனுமதியின்றி ஹோட்டல் மற்றும் காட்டேஜ்கள் கட்டப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கட்டடங் களுக்கு சீல் வைப்பதற்கான நோட்டீஸ் வழங்கும் பணியை அதிகாரிகள் வெள்ளி யன்று துவங்கினர். ‘இந்த உத்தரவு குடியிருப்புகளுக்கு பொருந்தாது, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை’ என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

புதுதில்லி
நீட் : மாற்றமில்லை
நீட் குறித்து புதிய நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது. அடுத்த ஆண்டு (2019) நீட் தேர்வு முறையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் தேர்வை நடத்த மத்திய அரசுத் திட்ட மிட்டுள்ளது. இரண்டு முறை நீட் தேர்வை நடத்தும் எண்ணம் கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை
கனிமொழி சாடல்
`கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிசாமி, அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு வதில் காட்டியிருந்தால், இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிசாமி, வரலாறு காணாத வகையில் தமிழக நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக் கொண்டிருக்கிறார்’ என கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

சென்னை
அணிவகுப்பு ஒத்திகை
72-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையில் கமாண்டோ, குதிரைப்படை, பெண் காவலர்கள், தேசிய மாணவர் படையினர் பங்கேற்றனர்.

திருப்பதி
தரிசனம் ரத்து
திருப்பதி கோவிலில், கும்பாபி ஷேகத்தை ஒட்டி வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நாள்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சென்னை
மீண்டும் கைது!
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளியன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றம் விடுவித்த பிறகும், 2017 செப்டம்பரில் தடையை மீறி பேரணி நடத்தி அரசுக்கு எதிராகப் பேசிய தாகக் கூறப்பட்ட வழக்கில் ராயப்பேட்டை போலீசார் மீண்டும் அவரை கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.