பழனி:
திருவாரூர் கோவில் சிலை முறைகேட்டில் தனக்குத் தொடர்பில்லை என்று முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா மறுப்பு தெரிவித்துள்ளார்.

பழனி உற்சவர் சிலை மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்து சமய அற நிலையத்துறையின் தலைமை ஸ்தபதி முத்தையா அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சிலை மோசடி வழக்கில் ஸ்தபதி முத்தையா ஜாமீன் பெற்று வெளியில் வந்துள்ளார்.
காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் சோமாஸ் கந்தர் சிலை மோசடி வழக்கிலும் முன்னாள் ஸ்தபதி முத்தையா சேர்க்கப்பட்டிருந்தார்.இந் நிலையில் திருவாரூர் கோவில் சிலை முறைகேடு மற்றும் தங்க நகைகள் கொள்ளைச் சம்பவத்தில் முத்தையா ஸ்தபதிக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை முன்னாள் ஸ்பதி முத்தையா மறுத்துள்ளார். தனக்கும் திருவாரூர் கோவில் சிலை முறைகேடு மற்றும் நகை களவாடப்பட்ட சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முத்தையா மறுப்பு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: