சென்னை,
திருவரங்கம் கோயில் சிலை காணாமல் போனதாகத் தொடரப்பட்ட வழக்கில் டிவிஎஸ் நிர்வாகி வேணு சீனிவாசனை 6 வாரத்திற்கு கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருவரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் மாயமானதாகத் தொடரப்பட்ட வழக்கில் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரியிருந்தார். கோயில் சிலைகள் மாயமானதாக தொடரப்பட்ட வழக்கில் தன் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. எனவே, இந்த வழக்கில் கைது செய்யத் தடை விதிக்கும்படி முன் ஜாமீன் மனுவில் கூறப் பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, வேணு சீனிவாசனை 6 வார காலத்துக்குக் கைது செய்ய தடை விதித்தார். இந்த வழக்கில், 6 வாரத்துக்கு வேணு சீனிவாசனை கைது செய்ய மாட்டோம் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவும் காவல்துறையும் பதில் அளித்துள்ளது. மேலும், முன் ஜாமீன் மனு மீது பதிலளிக்கவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: