தர்மசாலா:
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு முன்னாள் பிரதமர் நேரு தான் காரணம் என்ற தொனியில் பேசியதற்காக, தன்னை மன்னித்து விடுமாறு தலாய் லாமா பின்வாங்கியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கோவா மாணவர்களிடையே பேசிய தலாய் லாமா, “நாட்டு விடுதலைக்குப் பிறகு, சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த முகம்மது அலி ஜின்னாதான் இந்தியப் பிரதமர் ஆக வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார்; ஆனால், காந்தியின் விருப்பத்தை நேரு ஏற்கவில்லை; நேருவிற்கு இருந்த சுயநலமே இதற்கு காரணம்” என்று தெரிவித்திருந்தார். ஜின்னா பிரதமர் ஆகியிருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது என்றும் கூறியிருந்தார்.அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது ஆதாரமற்ற அவதூறு என்பதுடன், குழப்பம் ஏற்படுத்தும் நடவடிக்கை என்றும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், “எனது கருத்து சர்ச்சையை உருவாக்கிவிட்டது, நான் கூறியதில் தவறு இருக்குமானால் அதற்கு, தான் மன்னிப்பு கோருகிறேன்” என்று தலாய் லாமா பின்வாங்கியுள்ளார்.

திபெத்திய புத்தமதத் தலைவரும், அமெரிக்க ஏஜெண்டுமான தலாய் லாமா, தெற்காசிய பிராந்தியத்தில் குழப்பம் விளைவிக்கும் வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். குறிப்பாக, இந்திய – சீன உறவை சீர்கெடுப்பதில் நீண்டகாலமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: