திருப்பூர்,
அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருவலூர் ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் சாக்கடை வசதி செய்து தருமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இப்பகுதி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, அந்த மனுவை அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சமர்ப்பித்தனர். இதில் இந்திரா நகரில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் கான்கிரீட் சாலையில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்திரா நகர் பகுதி முழுவதும் சாக்கடை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: