கிருஷ்ணகிரி;
தமிழ்நாடு சத்துணவு ஊழி யர்கள் சங்க 14வது மாநில மாநாடு கிருஷ்ணகிரியில் வெள்ளியன்று துவங்கியது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆண்டாள் தலைமை தாங்கி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். வரவேற்புக் குழுத் தலைவர் சி.பி. ஜெயராமன் வரவேற்றார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமாநிலத் தலைவர் மு.சுப்பிர மணியன் துவக்க உரையாற்றினார். மாநில துணை தலைவர் தமிழ்ச் செல்வி, அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க மாநிலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநிலத் தலைவர் மணிமேகலை, வருவாய்துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பார்த்திபன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத் தலைவர் சின்னப்பன் நன்றி கூறினார்.மாநாட்டை துவக்கி வைத்த அரசு ஊழியர் சங்க மாநில தலை வர் சுப்பிரமணியன்,“புற்றீசல் போல் பெருகி வரும் ஊழல்களை மறைக்கவும் தங்கள் பதவிகளை காப்பாற்றிக்
கொள்ளவும் பாஜகவிடம் மண்டியிடும் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை, தமிழக உழைப் பாளி மக்களையும் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களையும் நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டது” என்று குற்றம்சாட்டினார்.

சத்துணவு ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும், சம்பள உயர்வு கொடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்
நவம்பர் மாதம் 28 ஆம் தேதி காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளோம். அந்த போராட்டத் திற்கு இம்மாநாடு அடித்தளமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராட்டு!
சங்க முன்னாள் மாநில நிர்வாகிகள் பழனிச்சாமி, ராமநாதன், ஜெயலட்சுமி ஆகியோர் இம் மாநாட்டில் கௌரவிக்கப்பட்டனர். அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க மாநிலத் தலைவர் கிருஷ்ண மூர்த்தியை ஓய்வூதி யர்கள் சங்க மாவட்டத் தலைவர் துரை மற்றும் நிர்வாகிகள் கவுரவித்தனர். சத்துணவு ஊழியன் மாத இதழுக்கு தூத்துக்குடி மாவட்டம் சார்பில் 14 சந்தாக்களும் திருவண்ணா மலை மாவட்டம் சார்பில் 1200 சந்தாக்களும் வழங்கப்பட்டன.

மலர் வெளியீடு!
சத்துணவு ஊழியர் சங்கத்தின் சத்துணவு ஊழியன் இதழின் வெள்ளி விழா ஆண்டு சிறப்பு மலரை எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன், வெளியிட பொதுச் செய லாளர் முருகேசன் பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.