கோவை,
கோவையில் திமுக தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்துக் கட்சியின் சார்பில் மௌன ஊர்வலம் நடைபெற்றது.

திமுக தலைவர் கலைஞரின் மறைவையொட்டி, கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் வெள்ளியன்று அனைத்துக் கட்சிகளின் சார்பில் மௌன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கோவை காந்திபுரம் அண்ணா சிலையிலிருந்து, வி.கே.கே மேனன் சாலை வழியாக மௌன பேரணியாக வந்து சித்தாப்புதூரில் கலைஞர் திருவுருவ படத்திற்கு அனைத்துக் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, இந்த மௌன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டத்தில் இந்தியதேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் மயூரா ஜெயகுமார், எம்.என்.கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி, மதிமுக ஆர்.ஆர்.மோகன்குமார், சேதுபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஆறுமுகம், தபெதிக கு.ராமகிருஷ்ணன், விசிக.சுசிகலையரசன், கொமதேக தனபால், ஆதித்தமிழர் பேரவையின் மாநிலத் தலைவர் அதியமான், தேமுதிக காட்டன் செந்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பஷீர், காதர்,திராவிடர் கழக சிற்றறசு, பெருந்தலைவர் மக்கள் கட்சி குமார் உள்ளிட்ட அனைத்து கட்சியின் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: