அரக்கோணம்,
கேரள மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

எனவே மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்பி வைக்க தில்லியில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தை கேரள அரசு கேட்டுக் கொண்டது. இதை யடுத்து வேலூர் மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களை மீட்புப்பணிக்கு செல்ல அதிகாரிகள் உத்தர விட்டனர். அதன்படி 4 குழுவாக மொத்தம் 100 வீரர்கள் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து தனி விமானத்தில் கேரளாவுக்கு வியாழனன்று புறப்பட்டு சென்றனர். மேலும் சாலை வழியாக 60 வீரர்கள் கேரளா புறப்பட்டனர். மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், உயிர்காக்கும் கருவிகள், முதலுதவி பொருட்கள், மரம் அறுக்கும் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், நீளமான கயிறுகள் உள்ளிட்ட மீட்பு பொருட்களை உடன் எடுத்து சென்றனர். மறு அறிவிப்பு வரும் வரை வீரர்கள் கேரளாவில் தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: