தீக்கதிர்

கேரள மக்களுக்கு புதுச்சேரி முதல்வர் ஆறுதல்

புதுச்சேரி,
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் 26 பேர் வரை பலியாகிவிட்டனர்.

கன மழையால் கேரளாவில் உள்ள இடுக்கி, வயநாடு, கோழிக் கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மாநில அரசின் மீட்பு நடவடிக்கை மட்டும் போதாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் பேரிடர் மீட்புப் படையினரும் கேரளா சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல மாநில முதல்வர்களும் கேரள அரசுக்கு நிதியுதவி அளித்து வருவதுடன், அம்மாநிலமுதல்வரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். தேவைப்படும் உதவிகளை செய்யத்தயாராக இருப்பதாகவும் உறுதியளித்து வருகின்றனர்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமையன்று (ஆக.10) கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தும், மழை வெள்ளத்தில் இறந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் தேவையான உதவிகள் செய்வதாக உறுதியளித்ததுடன், கேரள மாநில மக்களின் துயரத்தில் தானும், புதுச் சேரி மக்களும் பங்கு எடுத்து கொள்வதாகவும் தெரிவித்தார். அதற்கு கேரள முதல்வர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து முதல் வர் நாராயணசாமி கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத் திற்குள் வரும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட மாஹே பிராந்திய பகுதியில் மழையின் நிலை என்ன? பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்பதை அறிந்து பாதிப்பு ஏற்பட்டால் மக்களை காப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழக அரசு உதவி கனமழை மற்றும் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள முதலமைச்சர், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப் படுகிறது” என்று கூறியுள்ளார். கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என்றும், கேரள மக்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.