சென்னை,
குழந்தை கடத்தல் வழக்கில் இதுவரை எத்தனை பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையில் சாலையோரம் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் சிலரை மர்ம கும்பல்கள் கடத்திச் சென்றன. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், கடத்தப் பட்ட குழந்தைகள் மீட்கப்பட வில்லை. இதுகுறித்து எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த நிர்மல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து தலைமையிலான அமர்வு, காவல்துறையினரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதுவரை தமிழகத்தில் எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டன? எத்தனை குழந்தைகள் மீட்கப்பட் டன? கண்டுபிடிக்க முடியாத குழந்தைகளின் பெற்றோருக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கப் பட்டதா? என்று பல கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர். இதுகுறித்து தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையும், அவர்களின் புலன் விசாரணையும் திருப்தித்தர வில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் குழந்தை கடத்தல் வழக்கில் இதுவரை எத்தனை பேரை காவல்துறை கைது செய்துள்ளது என்று கேள்வி கேட்டு, அதற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: