பெங்களூரு:
தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளும் நிரம்பியுள்ளன. இதனால் இரு அணைகளிலிருந்து விநாடிக்கு
ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வியாழனன்று இரவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடிநீர் வந்த நிலையில், வெள்ளியன்று நீர்வரத்து
55 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தி லிருந்து காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ள உபரிநீர் ஓரிரு நாளில் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: