கோலாலம்பூர்:
கடந்த வாரம் சீனாவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் புதிய தரவரிசை பட்டியலை உலக பேட்மின்டன் சம்மேளனம் வியாழன்று நள்ளிரவு வெளியிட்டது.

இந்திய நட்சத்திரங்களின் நிலை:
மகளிர் தரவரிசையில்,உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 3-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.டாப் 10 இடத்துக்குள் இருந்த சாய்னா நேவால் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.இது சாய்னாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

ஆடவர் தரவரிசையில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2 இடங்கள் கீழிறங்கி 8-வது இடத்திலும்,பிரணோய் 11-வது இடத்திலும் (தக்கவைப்பு) உள்ளனர்.ஆடவர் இரட்டையர்,மகளிர் இரட்டையர்,கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் முதல் 15 இடத்திற்குள் இந்திய வீரர்-வீராங்கனைகள் எவரும் இல்லை என்பது குருப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.