சென்னை,
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் தரப்பிலும், பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரத்தின் வாதமும் நிறைவடைந்த நிலையில், தமிழக முதல்வர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார்.

இவ்வழக்கு வியாழனன்று (ஆக. 9) விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்குரைஞர் வைத்தியநாதன் ஆஜராக முடியாததால் முதல்வர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி சத்தியநாராயணன் வழக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

Leave A Reply

%d bloggers like this: