சென்னை:
9 வயதில் செஸ் உலகை கலக்கி வரும் ஸ்ரேயாஸ் விசா பிரச்சனை காரணமாக எந்த நாட்டிற்கு விளையாடுவது என்பது புரியாமல் தவித்து வருகிறார்.

இந்திய மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஸ்ரேயாஸின் தந்தை ஜிதேந்திர சிங்,சில ஆண்டுக்கு முன் அந்நிறுவனத்தின் உத்தரவின் பேரில் லண்டனில் உள்ள கிளை அலுவலகத்திற்கு மாறுதலாகி சென்றுள்ளார். அப்போது மனைவி, மகனையும் அழைத்துச் சென்றுள்ளார்.

மூன்று வயதில் இருந்து லண்டனில் வளர்ந்த ஸ்ரேயாஸ், சிறுவயது முதலே ராயல் செஸ் போட்டிகளில் கவனம் செலுத்தி,பிரிட்டன் சார்பாக சர்வதேச செஸ் போடிகளில் பதக்க வேட்டை நடத்தி வருகிறார்.செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவது 10 வயதுக்கு உட்படவர்கள் பிரிவில் 4-வது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில்,ஸ்ரேயாஸிற்கு புதிய பிரச்சனை ஒன்று முளைத்துள்ளது. தனது தத்தை ஜிதேந்திர சிங்கின் விசா காலம் செப்டம்பர் 10-ஆம் தேதியுடன் முடிவடைவதால்,ஸ்ரேயாஸ் லண்டனை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவ்வாறு ஸ்ரேயாஸ் வெளியேறினால் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த நாட்டிற்காக(இந்தியா அல்லது இங்கிலாந்து) களமிறங்குவது என்பதை உணரமுடியாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில்,செஸ் மேதை ஸ்ரேயாஸ் இங்கிலாந்தில் வளர்ந்ததால், அந்நாட்டுக்காக விளையாடுவது தான் முறை என தனது கருத்தின் மூலம் ஸ்ரேயாஸிற்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த்.

இதுகுறித்து ஆனந்த் கூறியதாவது,‘இங்கிலாந்தில் வெளிநாட்டவர் வசிப்பது அவரின் குடும்பத்தாரின் சொந்த விஷயம்.ஸ்ரேயாஸ் இங்கிலாந்தில் வளர்ந்ததால்,அந்நாட்டுக்காக விளையாடுவது தான் முறை” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: