புதுதில்லி, ஆக. 9-

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளையுடன் (வெள்ளிக்கிழமையுடன்) நிறைவடைகிறது. மிகவும் தாமதமாகக் கொண்டுவரப்பட்ட தலித்/பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச்சட்ட முன்வடிவு இக்கூட்டத்தொடரிலேயே மீளவும் மீளவும் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகமே. இதுதொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவந்து,ட அதனை அரசமைப்புச்சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் வைத்திட வேண்டும், அப்போதுதான் இச்சட்டத்தைத் தொடர்ந்து நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகளை இல்லாமல் செய்ய முடியும் என்று வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) புதுதில்லி, நாடாளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதலானோர் பங்கேற்றார்கள்.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: