பெங்களூரு;
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக் கில், கொலையாளிகள் பயன்படுத்திய இருசக்கரவாகனத்தை சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த 2017 -ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலை தொடர்பாக இந்துத்துவ அமைப்புக் களைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்போது இந்த வழக் கில் கொலையாளிகள் பயன்படுத்திய இருச்சக் கர வாகனத்தை விஜயாபுரம் மாவட்டத்தில் சிறப்பு புனலாய்வு துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது 11-ஆவது கொலையாளியான மனோஹர் எட்வேவுக்கு சொந்தமானஇருசக்கர வாகனம் என்பதையும் ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள் ளனர்.

Leave A Reply

%d bloggers like this: