”ராஜாஜி, காமராஜர் ஆகியோர் இறந்தபோது, அவர்களுக்குக் கடற்கரையில் இறுதிக் காரியங்கள் செய்து, நினைவிடம் அமைக்க அனுமதிக்குமாறு முதலமைச்சர் கலைஞரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அனுமதி அளிக்க கலைஞர் மறுத்துவிட்டார்” என்று ஒரு சர்ச்சை எழுப்பப்பட்டு உள்ளது.

இது பற்றி இன்றைய ஆங்கில இந்து நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. “ராஜாஜிக்குக் கடற்கரையில் இடம் கேட்கப்படவே இல்லை. அவரது விருப்பப்படியே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது” என்று ராஜாஜியின் பேரன் சி.ஆர்.கேசவன் கூறினார் என்று அந்தச் செய்தியில் உள்ளது. நல்லது. ஆனால் காமராஜர்?

”காமராஜருக்குக் கடற்கரையில் இடம் தர வேண்டும் என்று பழ.நெடுமாறன், கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதியிடம் வலியுறுத்திக் கேட்டார்கள். ஆனால் கருணாநிதி மறுத்துவிட்டார் என்று திண்டிவனம் ராம்மூர்த்தி கூறினார்” என அந்தச் செய்தியில் உள்ளது. இதை நான் படித்ததும் ”அந்தப் பத்திரிகை நெடுமாறனிடம் கேட்டிருக்கலாமே, ஏன் கேட்கவில்லை?” என்று எனக்குத் தோன்றியது.

இன்று பிற்பகலில் ’தி நியூஸ் மின்ட்’ இணையதளமும், ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணைய தளமும் நெடுமாறனிடம் கேட்டு, செய்தி வெளியிட்டுள்ளன. “காமராஜருக்குக் கடற்கரையில் இடம் அளிக்குமாறு நாங்கள் கேட்கவே இல்லை. காங்கிரசில் இருந்த நாங்கள் காங்கிரஸ் மைதானத்தில்தான் இறுதிக் காரியங்களைச் செய்ய முடிவு செய்திருந்தோம். அப்போது முதலமைச்சர் கருணாநிதி, அவராகவே முன்வந்து, காமராஜரைக் கவுரவிக்கும் வகையில், காந்தி மண்டபம் அருகில் இடம் அளித்தார்” என்று நெடுமாறன் கூறியுள்ளார்.

இத்துடனாவது இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.

Jawahar Ramasamy

– மூத்த பத்திரிகையாளர் ஜவஹர் முகநூல் பதிவிலிருந்து…

Leave A Reply

%d bloggers like this: