மாஸ்கோ:
ரசாயன தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா மீது  அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது.அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா ரஷ்யா மீது ஏற்கனவே சில பொருளாதார தடைகளை விதித்து இருந்தது.கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் வசித்து வந்த செர்கே ஸ்கிர்பால், அவரது மகள் யூலியா
ஆகியோர் மீது மர்ம நபர்கள் ரசாயன தாக்குதல் நடத்தினார்கள். செர்கே ஸ்கிரிபால் ரஷ்ய உளவுப்பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.அவர் இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்
பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பிறகு அவர் இங்கிலாந்தில் வசித்து வந்தார். இந்த நிலையில்தான் தாக்குதல் நடந்தது. இதில், பாதிக்கப்பட்ட அவர்கள் தீவிர சிகிச்சை
க்குப் பின் உயிர் பிழைத்தனர். அவர்கள் மீது ரஷ்யாதான் தாக்குதல் நடத்தியதாக இங்கி
லாந்து குற்றம் சாட்டியது. அமெரிக்காவும் கண்ட னம் தெரிவித்தது. ஆனால், ரஷ்யா நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று கூறியது.

இது தொடர்பாக இங்கிலாந்து தனியாக விசாரணை ஒன்றை நடத்தியது. அதில், ரஷ்யாதான் தாக்குதல் நடத்தியது என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கூறிக் கொண்டது.
இதையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா புதிதாக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் இப்பிரச்சனையைக் காரணம் காட்டி ரஷ்யாவின் 60 தூதரக அதிகாரிகளை வெளியேற்றும்படி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தர
விட்டார். ஐ.நாவிற்கான அமெரிக்கத் தூதர் நிக்கிஹேலி, இந்த தாக்குதலுக்கு பின்னனியில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது என பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார்.
இத்தகைய பின்னணியில் தற்போது புதிய தடையால் மோதல் தீவிரமடைந்துள்ளது.ரஷ்யா கடும் எதிர்ப்பு
இந்நிலையில் அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதார தடைக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் இந்த பொருளாதார தடை குறித்து ரஷ்யாவின் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘இந்த பொரு
ளாதார தடையை நிச்சயம் ஏற்க முடியாது’ என உறுதிபட தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.