சேலம்,
மேட்டூர் அணையில் உள்ள தொழிலாளர் பணியாளர் கூட்டுறவு சங்கதேர்தலில் சிஐடியு அமோக வெற்றி பெற்று நான்கு கூட்டுறவு சங்கங்களை கைப்பற்றி உள்ளது.

இதன்படி சேலம் மாவட்டம், மேட்டூர் மின் விநியோக வட்ட தொழிலாளர் கூட்டுறவு சங்கம் எண்:எஸ்.எம்.55ல் நடைபெற்ற தேர்தலில் ஆர்.மாதையன், கே.சந்திரா, சி.சகுந்தலா, கே.சந்திரசேகரன், ஆர்.ஜான்சன், ஆர்.சிவகுமார், பி.உதயகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதேபோல், மேட்டூர் நீர் மின் உற்பத்தி வட்ட பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் எண்: 56ல் நடைபெற்ற தேர்தலில் பி.கே.சிவகுமார், எ.பழனிசாமி, என்.கே.மோகன், எஸ்.கிருஷ்ணன், இ.கிருஷ்ணன், அலமேலு, லதாபிரியதர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும், கனிம நிறுவன பணியாளர் கூட்டுறவு சங்கம் எண்:எஸ்.எம்17ல் நடைபெற்ற தேர்தலில் மகேந்திரன், தமிழரசி, செல்வி அய்யண்ணன், அண்ணாதுரை, சாமிதுரை ஆகியோரும், மேட்டூர் நகராட்சி பணியாளர் சங்கம் எண்:எஸ்.எம்.53ல் நடைபெற்ற தேர்தலில் பி.இளங்கோ, கே.மணிகண்டன், பி.கௌரி, எஸ்.சாந்தா, கே.ராஜேந்திரன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேட்டூர் அனல் மின் நிலைய பணியாளர் கூட்டுறவு சங்கத்தில சிஐடியு சார்பில் செந்தில்வேலன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அனைத்து பணியாளர் கூட்டுறவு சங்கத்திலும் பெருவாரியான இடங்களை சிஐடியு கைப்பற்றியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.