மாநிலங்களவைத் துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அந்தப் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 246 ஆகும். மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றிபெற 123 வாக்குகள் பெற்றால் வெற்றி பெறுவார் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் ஹரிவன்ஷ் நாராயண சிங் மற்றும் எதிர்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் உறுப்பினர் பி.கே. ஹரிபிரசாத் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். நேற்று இரண்டு எம்.பிக்களும் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.  இன்று காலை 11 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் பத்திரிகையாளர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் 125 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் உறுப்பினர் ஹரி பிரசாத் 105 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இதன் காரணமாக பாஜக வேட்பாளர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றிபெற்றதாக அறிவிக்கப் பட்டது. இந்த வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது. பாஜக வேட்பாளருக்கு… அதிமுக மற்றும் பிஜூ ஜனதாதள மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.