கோவை:
போலி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளதாக கூறி தமிழகம் மற்றும் கேரளா மாணவர்கள் 22 பேரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.

2017-ஆம் ஆண்டிற்கு பின்னர் ஆஸ்திரேலியா நாட்டில் படிக்க என்.பி.ஏ. எனப்படும் தேசிய அங்கீகார சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அந்நாட்டின் அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 22 மாணவர்களின் சான்று போலியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் விசாவை ரத்து செய்து ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் கோவையை சேர்ந்த இரு தனியார் நிறுவனம் போலி சான்று தயாரித்து மாணவர்களை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து முறையான புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

Leave A Reply

%d bloggers like this: