நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. இந்தக் கூட்டத் தொடரில், தாழ்த்தப்பட்ட – பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மீண்டும் உயிர்ப்புடன் ஆக்கும் விதத்திலான புதிய மசோதா நிறைவேற்றப்படாது என்று தெரிகிறது.

உச்சநீதிமன்றம், இச்சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் விதத்தில் தீர்ப்பளித்த பிறகு, உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் திட்டமிட்டு காலம் தாழ்த்திய மோடி அரசு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் நடந்த தீவிரமான போராட்டங்களின் விளைவாக வேறுவழியில்லாமல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடியும் தருவாயில் சில நாட்களுக்கு முன்பு இச்சட்டத்தை மீண்டும் பழைய வடிவிலேயே நடைமுறைப்படுத்துவதற்கான திருத்த மசோதாவை முன்மொழிந்தது. அது விவாதத்திற்கும் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இப்போது கூட்டத் தொடர் முடிவடைவதால் உடனடியாக நிறைவேற்றப்படப் போவதுமில்லை. எனவேதான் உடனடியாக ஒரு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்துகிறோம். பிற்காலத்தில் எந்தவிதத்திலும் இந்தச் சட்டத்தை நீர்த்துப் போக செய்யவிடாமல் தடுக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் அதை சேர்த்திட வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.