புதுதில்லி;
பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களை நுகர்வோர் வாங்குவது குறைந்து விட்டதால், யோகா சாமியார் ராம்தேவும், பதஞ்சலி சிஇஓ ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாபா ராம்தேவும், ஆச்சார்யா பாலகிருஷ்ணாவும், சுதேசி தயாரிப்புகள் என்ற பெயரில், தரமற்ற பொருட்களை விற்று கல்லா கட்டி வந்தனர். அதிலும் மோடி ஆட்சிக்கு வந்தது முதல், நுகர்பொருள் சந்தையில் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி பல ஆயிரம் கோடி ரூபாய்களை லாபமாக குவித்தது.மோடி ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டில் ரூ. 2 ஆயிரம் கோடி விற்றுமுதல் பெற்ற பதஞ்சலி நிறுவனம், 2017-ஆம் ஆண்டில் ரூ. 10 ஆயிரம் கோடி விற்றுமுதல் பெற்றது.பதஞ்சலி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டுக்கும் 100 சதவிகித வளர்ச்சியைப் பெற்று முன்னேறும் எனவும், இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்படும் என்றும் ராம்தேவ் கொக்கரித்திருந்தார்.

ஆனால், கிரெடிட் சுயிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பதஞ்சலி நிறுவனத்தின் வருவாய் எந்த வளர்ச்சியையும் எட்டாமல் முடக்கம் கண்டுள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல், பதஞ்சலி நிறுவனத்தின் தரமற்ற பொருட்களைக் கண்டாலே நுகர்வோர் அலறியடித்துக் கொண்டு ஓடுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு, சாமியார் ராம்தேவை தற்போது சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: