நீலகிரி மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி யானை வழித்தடங்களில் தனியார் சொகுசு விடுதிகள் கட்டப்பட்டிருப்பதாக ரங்கராஜன் மற்றும் யானை ராஜேந்திரன் உள்ளிட்ட 23 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதிமுறைகளை மீறியோ அல்லது அனுமதி பெறாமல் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து அனைத்து மாநிலங்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் மதன் லோக்கூர், அசோக் பூஷண். கே.எம்.ஜோசப் அமர்வு மாநிலம் வாரியாக விசாரித்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 446 விடுதிகள் அரசு அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற பெஞ்ச் 11 விடுதிகளுக்கு உடனடியாக சீல் வைக்குமாறு உத்தரவிட்டனர். 39 விடுதிகள் 48 மணி நேரத்திற்குள் அரசு அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெறாவிட்டால் அந்த சொகுசு விடுதிகளுக்கும் சீல் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Leave A Reply

%d bloggers like this: