சென்னை
மெரினாவில் ஸ்டாலின்
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வியாழன் பிற்பகல் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா பகுதிக்கு வந்தார். அங்கு அவர் மாலையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வந்திருந்தார். அங்கு கூடாரம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

சென்னை
8 டன் குப்பை அகற்றம்
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் புதனன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்பகுதியில் தொண்டர்கள் செருப்பு உட்பட 8 டன் குப்பை அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுதில்லி
‘நான் தான் வென்றேன்’
டிராய் இயக்குநர் ஆர்.எஸ். சர்மா, ஆதார் சவாலில் தான் வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். ‘எனது ஆதார் எண்ணை டுவிட்டரில் பதிவிட்டும் எனக்கு எந்தப்பாதிப்பும் வரவில்லை’ என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் டுவிட்டரில் தமது ஆதார் எண்ணைப் பகிர்ந்து முடிந்தால் ஹேக் செய்துகொள்ளுமாறு சவால் விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே அவரது விவரங்களை பிரான் சைச் சேர்ந்த கணினி நிபுணர் எலியார்ட் ஆண்டர்சன் ஹேக் செய்துவிட்டார். ஆனாலும் அவர் திருந்தவில்லை.

சென்னை
தடை இல்லை
விஸ்வரூபம்-2 படத்துக்குத் தடைவிதிக் கக்கோரி பிரமிட் சாய்மீரா நிறுவனம் தாக்கல்
செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை
விசாரித்த நீதிமன்றம் விஸ்வரூபம் 2 படத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. விஸ்வரூபம் 2 படம் வெள்ளியன்று வெளி யாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை
முக்கியப் பொறுப்பு
ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குநர்களில் ஒருவராக ஆடிட்டர் குருமூர்த்தி நிய
மிக்கப்பட்டுள்ளார். இவர், ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில், செயல் சாரா இயக்கு நராக நான்கு ஆண்டுகள் பொறுப்பு வகிப் பார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த இவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

சிட்னி
மாணவர்கள் விசா ரத்து
எம்.பி.ஏ படிப்புக்காக தனியார் ஏஜென்சி மூலம் ஆஸ்திரேலியா சென்ற 22 இந்திய
மாணவர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளது அந்நாட்டு அரசாங்கம். போலிச் சான்றி தழ் சமர்ப்பித்து விசா பெற்றதால், விசா ரத்தாகியுள்ளது. இதனால், மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி யுள்ளது.

சென்னை
திருமுருகன் காந்தி கைது
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பேசி
விட்டு திரும்பியபோது, பெங்களூரு விமான நிலையத்தில் திருமுருகன் காந்தி கைது
செய்யப்பட்டுள்ளார். ஐ.நாவில் பேசிய தற்காக பழைய போராட்டங்களில் தொடரப்
பட்ட வழக்குகளைக் காரணம் காட்டி கைது செய்துள்ளதாக அவரது தலைமையிலான மே 17 இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.