புதுச்சேரி,
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் அனைவருக்கும் நலவழிக்கல்வி மையம் மற்றும் புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையும் இணைந்து “தாய்ப்பால் வாழ்வின் அடித்தளம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜிப்மர் வளாகத்தில் நடைபெற்றது.

குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் குழந்தை பிறந்த 1 மணி நேரத்திற்குள் கொடுக்கும் தாய்ப்பாலின் நன்மைகள், அதன் மூலம் குழந்தைக்கு கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின்தன்மை, குழந் தைகளுக்கு 6 மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் மட்டுமே தருதல், 6 மாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவுகள் போன்ற தகவல்கள் பொதுமக்களிடையே குறும்படங்கள் மூலம் விளக்கப்பட்டது. இவ்விழாவில் புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் ஆர். அஷ்வந்தையா, செயலாளர் அலெஸ் வாஸ், ஜிப்மர் மருத்துவமனை துணை இயக்குநர் வி.எஸ். செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். பொது மக்களின் கேள்விகளுக்கு பச்சிளங்குழந்தைகள் துறை இணை பேராசிரியர்கள் ஜெயலட்சுமி, நிவேதிதா ஆகியோர் எளிய தமிழில் பதில் அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.