சென்னை:
சிலைக்கட த்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கேட்டுள்ளது.

அமைச்சர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை காப்பாற்றவும் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை நீக்கும் உள்நோக்கத்துடனும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் கொள்கை முடிவு என்றும் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தடை விதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஒரு நிமிடம் கூட நீடிக்கத் தகுதியில்லாத அரசாணை என்றும் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அரசாணை பிறப்பிப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும் தெரிவித்து தமிழக அரசு உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் அளிக்க அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: